அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களிலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட தஞ்சாவூரிலும் காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.