தமிழ்நாடு காவல்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேலூரை சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் 2022 ஆம் ஆண்டு தொடர்ந்த மோசடி வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும்போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, நீதிமன்ற உத்தரவுகளை ஆன்லைன் முறையில் கண்காணிப்பதாக கூறினாலும் கள நிலவரம் வேறாக இருப்பதாக தெரிவித்தார்.