மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, டாணா புயலாக உருவெடுத்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்ற நிலையில், 24-ந் தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாணா புயல் ஒடிசாவின் பூரி, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.