வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம், இன்று மாலை புயலாக உருமாறுகிறது. தமிழகம் நோக்கி மணிக்கு.13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல் சின்னம், நாகைக்கு தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பது இன்னும் கணிக்கப்படாத நிலையில், புதிதாக உருவாகும் புயலுக்கு பெங்கல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.