பணியில் போது உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண், தலைமை காவலரின் மனைவியிடம் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மீனம்பாக்கம் காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்த வந்த ரவிக்குமார் என்பவர், பணியின் போது திடீனெ மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து, மாடம்பாக்கத்தில் உள்ள காவலரின் இல்லத்திற்கு சென்ற காவல்துறை ஆணையர் அருண், அங்கு காவலர் ரவிக்குமாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து, காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி,25 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினார்.