தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் திங்கட்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவையில் வரும் 14ஆம் தேதி பொதுத்தேர்வு அட்டவணைகளை வெளியிடுகிறார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர், அவர்களது அறிவுறுத்தலுக்கு இணங்க பொதுத்தேர்வு அட்டவணைகளை வெளியிட உள்ளார்.