இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆம் ஆண்டினை சிறப்பாக கொண்டாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வரும் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும், உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலகங்களில் அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கும் முன்னெடுப்பை எடுக்கவேண்டும் என ஆணையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளிலும் அரசியலமைப்பு சார்ந்த போட்டிகள், கருத்தரங்கு, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.