மதுரையில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ள கூடாது எனவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கை மதுரை மக்களுக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்