ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதுவரை 28 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.