உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி, மதிவேந்தன் ஆகியோரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி பொன்முடிக்கு வனத்துறையும் கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் மற்றும் மதிவேந்தனுக்கு ஆதி திராவிடர் நலத்துறையும் வழங்கப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதிதித்துறையுடன் சுற்றுச்சூழல் துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.