தமிழகத்தில் இன்று தொடங்கி வரும் 16-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.