தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதால் வருகிற 27ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, ஈரோடு, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.