தமிழ்நாட்டில் 500 கோடி ரூபாயை முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உலகளவில் கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் கேட்டர்பில்லர் நிறுவனம், இந்த ஒப்பந்தம் மூலம் திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தங்களது கட்டுமான கருவிகள் உற்பத்தி நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அமெரிக்கா பயணத்தில், தற்போது வரை 16 முன்னணி நிறுவனங்களுடன் 7016 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தியுள்ளன.