நிறுவன தினத்தையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் "சர்வத்ரா-பி.எஸ்.என்.எல். வைஃபை" மற்றும் இண்ட்ராநெட் டெலிவிஷன் என்ற இரண்டு புதிய சேவையை பரிசோதனை அடிப்படையில் எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்து வைத்துள்ளது. சர்வத்ரா-பி.எஸ்.என்.எல். வைஃபை ரோமிங் சேவையை பெற பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்கள் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்வதன் மூலம் தங்களின் வெளியூர் பயணங்களின் போது இணைய தளத்தில் இணைந்திருக்க முடியும் என்றும் இதற்கான டேட்டா தரவுகள் வாடிக்கையாளர்களின் தற்போதைய திட்டத்தில் இருந்தே கழிக்கப்படும் என்றும் வை-பை ரோமிங் சேவைக்கு தனியாக கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இண்ட்ராநெட் டெலிவிஷன் சேவையில் 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.