தமிழ்நாடு அரசின் C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி போனஸ் தொகை அறிவித்துள்ளார். அதிகபட்சமாக 20 சதவீதமும் குறைந்த பட்சமாக 8 புள்ளி 33 சதவீதமும் போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக பணியாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் கருணைத்தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.