2400 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி அரங்கேற இருந்ததை தடுத்து நிறுத்தியதாக கூறி பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதியை அக்கட்சியின் தலைவர் அன்புமணி பாராட்டியுள்ளார். கோவையில் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்த MyV3Ads நிறுவனம் 2400 கோடி மோசடி செய்ய இருந்தது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும், சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அசோக் ஸ்ரீநிதி தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ள அவர், பொதுவாழ்வின் நோக்கமே மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களை காப்பாற்றுவதும் தான் என்ற நிலையில் அப்பணியை அசோக் ஸ்ரீநிதி சிறப்பாக செய்து வருவதாக பாராட்டியுள்ளார். மேலும் MyV3Ads மோசடி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து மக்களையும் அவர்களது முதலீடுகளையும் காப்பாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.