அதானி குழும ம் விலைக்கு வாங்கிய அம்புஜா சிமென்ட் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 7 ஆயிரத்து 516 கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு ஒன்பது சதவிகித வளர்ச்சியை பெற்று வரும் இந்த நிறுவனம், கடந்த ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக இந்த அளவுக்கு வருமானத்தை ஈட்டி உள்ளது. அம்புஜா சிமென்ட் ஆண்டொன்றுக்கு 1.42 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்கிறது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் அம்புஜாவின் லாபம் 450 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.