கேரளாவில் ரயில் மோதி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன், வள்ளி, லட்சுமணன், ராஜம்மாள் ஆகியோர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷோரனூர் பாரத்புழா பாலம் அருகில் ரயில் பாதையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 பேரும் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 4 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாகவும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.