2026 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு விலையில்லா வேட்டி- சேலைகள் வழங்கும் திட்டத்திற்கு, சுமார் 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை டெண்டர் கோரியுள்ளது. இதற்காக, முதல்கட்டமாக 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜூலை இறுதியில் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு ஒரு கோடியே 44 லட்சத்து 10 ஆயிரம் வேட்டிகள் மற்றும் ஒரு கோடியே 46 லட்சத்து 10 ஆயிரம் சேலைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.