19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை இம்மாதம் 48 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர், கடந்த மாதம் ஆயிரத்து 855 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இம்மாதம் 48 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமும் இன்றி 818 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.