தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முந்தல் சோதனை சாவடியில் 11ஆவது நாளாக சுகாதாரத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் சுகாதாரத்துறை சோதனையில் ஈடுபட்ட வருகிறது. அதன்படி தேனி மாவட்டம் முந்தல் சோதனை சாவடியில் 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரள தேயிலை தோட்டங்களுக்கு தமிழகத்திலிருந்து பணியாளர்கள் செல்வதாலும், சுற்றுலா பயணிகள் வருவதாலும், கண்காணிப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. அங்கு ஒரு அதிகாரி மட்டுமே இருப்பதால் பல வாகனங்கள் ஆய்வு செய்யப்படாமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.