தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 107 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் ராமசாமி படையாட்சியாரின் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.