மகளிர் உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், 100 ரன்கள் வித்யாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து பெண்கள் அணி, 50 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி, 39 புள்ளி 5 ஓவர் முடிவில் 127 ரன்களுக்கு அல் ஆவுட் ஆனது.