தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வியை சந்தித்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது. 3ஆம் இடத்தில் இருந்த இந்திய அணி ஒரு இடம் சரிந்து 4ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணி, புள்ளிப் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 2ஆம் இடத்தில் உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.