உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் குர்பிரீத் சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் பாவ்லோவும், குர்பிரீத் சிங்கும் தலா 584 புள்ளிகளை எடுத்த போதும், 10 புள்ளிகள் இலக்கின் உள்பகுதியில் நெருக்கமாக சுட்டதன் அடிப்படையில் பாவ்லோ முதலிடம் பிடித்ததால், குர்பிரீத் சிங் நூலிழையில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார்.