அமெரிக்க ஓபன் டென்னிஸின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் ஒன் வீராங்கணையான பெலாரசின் சபலென்கா 3வது சுற்றுக்கு முன்னேறினார். நியூயார்க்கில் நடைபெற்று வரும் போட்டியின் 2வது சுற்றில் பெலாரசின் சபலென்கா, ரஷியாவின் பொலினா குடர்மெடோவா ((Polina Gudermetova)) உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7க்கு 6, 6க்கு 2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6க்கு3, 6க்கு1 என்ற நேர்செட் கணக்கில் ஹங்கேரியின் அன்னா போந்தாரை ((Anna Bondár)) வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.