உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற திவ்யா தேஷ்முக்கிற்கு மகாராஷ்டிரா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ் முக் சாம்பியன் பட்டம் வென்றார். இதனை தொடர்ந்து சொந்த ஊரான மகாராஷ்டிரா திரும்பிய அவருக்கு குடும்பத்தினர், உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.