இங்கிலாந்தில் நடைபெறவுள்ள வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் 30 கிராம் தங்கச் சங்கிலி பொருத்தப்பட்ட ஜெர்சியை அணிந்து கெயில் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடவுள்ளது. துபாயைச் சேர்ந்த லோரன்ஸ் என்ற ஆடம்பர ஆடைகள் வடிவமைப்பு நிறுவனம் இந்த ஜெர்சியை தயாரித்துள்ளது.