ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவை 58 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது. இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அப்போது இந்திய வீராங்கனைகள் , நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்கமுடியாமல் விரைவில் ஒவ்வொருத்தராக ஆட்டமிழந்து வெளியேறினர்.இறுதியில், இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.