மகளிர் உலககோப்பை தொடரில் முதல் முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீராங்கனைகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பிரதமரின் லோக் கல்யாண் மார்க் வீட்டில் அவரை சந்தித்த வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர். பின்னர் நீண்ட நேரம் வீராங்கனைகளிடம் உரையாடிய பிரதமர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.