ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியிருக்கு. அதுல குறைந்தப்பட்ச டிக்கெட் விலை 114 ரூபாயும், அதிகப்பட்சமா முக்கிய பிரமுகர்களுக்கான சொகுசு டிக்கெட் 15 ஆயிரத்து 930 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கு. மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கட்டணமில்லாமல் டி20 உலகக்கோப்பைய கண்டுகளிக்கலாம்னும் ஐசிசி தெரிவிச்சு இருக்காங்க.