பெண்கள் டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.