அடுத்த மாதம் தொடங்க உள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த அனைத்து போட்டிகளும், கேரளாவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதனிடையே காவல்துறையின் அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. விதித்த காலக்கெடு கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை பி.சி.சி.ஐ. தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.