மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி லீக் ஆட்டத்தில், இந்திய அணி 13க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பீகார் மாநிலம் ராஜ்கிர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியுடன் பலப்பரீட்சை செய்தது. இந்த போட்டியில் இளம் இந்திய வீராங்கனை தீபிகா அதிகபட்சமாக ஐந்து கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார்.