பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அட்டவணையை ICC நேற்று அறிவித்தது. இதில், உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. GROUP-A பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றின் மூலம் முன்னேறும் 2 அணிகளும் இடம்பெறும். GROUP-B பிரிவில் இங்கிலாந்து , நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை மற்றும் தகுதி சுற்றின் மூலம் முன்னேறும் 2 அணிகள் இடம்பெறும். ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில், இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை ஜூன் 14ஆம் தேதி எதிர்கொள்கிறது.இதையும் படியுங்கள் : ரோகித் சர்மா சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்..