ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய ஆடவர் அணி வித்தியாசமான சாதனையை படைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற வித்தியாசமான சாதனை பட்டியலில், இந்திய அணி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் 197 ரன்களை சேசிங் செய்து இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.