விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற கரேன் கச்சனோவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரரான கரேன் கச்சனோவ், போலந்தின் கமில் மஜ்க்ர்சாக் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கரேன் கச்சனோவ் 6க்கு 4, 6க்கு 2 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.