லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதல் வீரராக அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் பிரிட்ஸ் ((Taylor Fritz)) அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் ((Karen Khachanov)) உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் 6க்கு3, 6க்கு4, 1க்கு6 மற்றும் 7க்கு6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.