லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் பாலாஜி, மிகுவல் ரெய்ஸ்-வரேலா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் லெர்னர் டியென், அலெக்சாண்டர் கோவாசெவிக் ஜோடியுடன் மோதிய அவர்கள், 6க்கு 4, 6க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.