ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யரை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில் திருப்பங்களும், டுவிஸ்டுகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. டெஸ்ட் போட்டி கேப்டனாக இருந்த சுப்மன் கில், ஆசிய கோப்பையில் வைஸ் கேப்டனாக மாற்றப்பட்டு கேப்டன் பொறுப்பு சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்து பார்மட் போட்டிகளையும் சுப்மன் கில்லால் தாங்க முடியாது என கருதும் பிசிசிஐ , 2027 உலக கோப்பை நடந்து முடியும் வரை, ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.இதையும் படியுங்கள் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அபாரம் கலப்பு இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி சாம்பியன்