2026 ஐபிஎல் தொடருக்காக சஞ்சு சாம்சனை trade செய்வது குறித்து மீண்டும் ராஜஸ்தான் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு சாம்சனுக்கு பதிலாக ருதுராஜ், ஜடேஜா போன்றவர்களை ராஜஸ்தான் அணி கேட்டதால், அதற்கு சென்னை அணி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், முதற்கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்திருந்தது.