சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த பிராவோ, கேகேஆர் அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே-வின் முன்னாள் வீரர்கள் ஆல்பி மோர்கல், பாலாஜி, பரத் அருண் ஆகியோரில் ஒருவர் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.