இந்தியாவில் அக்டோபர் மாதம் சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 2 முதல் 14 ஆம் தேதி வரை அகமதாபாத் மற்றும் டெல்லியில் போட்டிகள் நடைபெறுகிறது. கேப்டன் ரோஸ்டன் சேஸ் மற்றும் துணை கேப்டன் ஜோமல் வாரிகன் உட்பட 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.