ரோகித், கோலி ஆகியோர் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருந்தால் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் ஆட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. புதிய திட்டத்தை தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2027 உலககோப்பை அணியில் ரோகித், கோலி இடம் பெறுவதை தேர்வு குழு விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு அந்த பதவி டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.