ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பான கேட்ச் ஒன்றை பிடித்த பிறகு விராட் கோலி ஜாலியாக செய்த செயல் குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆட்டத்தின் போது, மேத்யூ ஷார்ட் வேகமாக அடித்த பந்தை விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்தார். உடனே பந்தை பின்னால் இருந்த அம்பயரிடம் விளையாட்டாக தூக்கி வீசினார்.