டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விராட்கோலி அறிவித்துள்ளார். இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட்கோலி அறிவித்துள்ளார். 14 ஆண்டுகளில் 269 டெஸ்ட்களில் விளையாடியுள்ள விராட்கோலி, டெஸ்ட் கிரிக்கெட் என்னை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாக உருவாக்கியது என்றும், முழு மன நிறைவோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்றும் தெரிவித்தார்.