டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்ட முடிவை விராட் கோலி திரும்பப் பெற வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் பிரையன் லாரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு விராட் நிச்சயம் தேவை என தெரிவித்துள்ளார். மேலும், மீதமுள்ள காலங்களில் விராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக பெரிய சாதனைகளை செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.