விஜய் ஹசாரே டிராபி தொடரில் முதல் முறையாக விதர்பா அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெங்களூருவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா மற்றும் விதர்பா அணிகள் மோதின. டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய விதர்பா அணி 50 ஓவர் முடிவில் 317 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் அதர்வா டைட் சதமடித்தார். தொடர்ந்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணி, 48.5 ஓவரில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற விதர்பா அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.இதையும் படியுங்கள் : நடிகர் சசிகுமார் நடிக்கும் "MY LORD" திரைப்படம்