கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு சாம்பியனும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் அணி 26 கோடிக்கு ஏலத்தில் எடுத்துவிட்ட நிலையில், அடுத்த ஐ.பி.எல்லில் கே.கே.ஆர்.அணியின் கேப்டன் பொறுப்பில் வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஐ.பி.எல்லில் கே.கே.ஆர்.அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயரை 23 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.