19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை 14 வயதே ஆன இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி தன் வசமாக்கினார். இங்கிலாந்தின் வொர்செஸ்டர்((WORCESTER)) நகரில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் நான்காவது போட்டியில் 52 பந்தில் 100 ரன்களை கடந்து வரலாற்று சாதனையை படைத்தார்.